/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜூலை 17 ஆர்ப்பாட்டம் : செவிலியர்கள் முடிவு
/
ஜூலை 17 ஆர்ப்பாட்டம் : செவிலியர்கள் முடிவு
ADDED : ஜூலை 08, 2025 10:09 PM
ராமநாதபுரம்:அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் காலிப்பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நல்வாழ்வு சங்கங்கள் மூலம் நியமனம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன் ஜூலை 17 ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த ராமநாபுரத்தில் நடந்த தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கசெயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து சங்க மாநில பொது செயலாளர் சுபின் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் செவிலியர் மற்றும் மருத்துவ ஊழியர்களை 11 மாதம் தற்காலிக ஒப்பந்த முறையில் மாவட்ட நல்வாழ்வு சங்கங்கள் பணியமர்த்தும் அரசின் முடிவை கைவிடக் கோரி நாளை (ஜூலை 10) அனைத்து கலெக்டர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்யப்படவுள்ளது.
தேர்தலின் போது தி.மு.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது, செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும், அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் ஜூலை 17 நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.