/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட அணிக்கு கபடி வீரர்கள் தேர்வு
/
மாவட்ட அணிக்கு கபடி வீரர்கள் தேர்வு
ADDED : நவ 02, 2025 10:43 PM

திருவாடானை:  திருவாடானை அருகே தினையத்துாரில் அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில், மாவட்ட அணிக்கான கபடி வீரர்கள் தேர்வு நடந்தது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்களை தேர்வு செய்ய முகாம்கள் நடத்தபடுகிறது. இப்போட்டி நவ.7 முதல் 9 வரை ஜீனியர் சாம்பியன் சீப் கபடி போட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடக்கிறது. இதற்கான மாவட்ட அளவிலான ஜீனியர் கபடி வீரர்கள் தேர்வு முகாம்கள் பல்வேறு பகுதியில் நடக்கிறது. ராமநாதபுர மாவட்ட அளவிலான வீரர்கள் தேர்வு திருவாடானை அருகே தினையத்துாரில் நடந்தது. இதில் சாயல்குடி, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். வீரர்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு மாவட்ட அளவில் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு 20 வீரர்கள் தேர்வு செய்யபட்டனர்.

