/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பட்டா, சிட்டா, சர்வர் முடக்கம்: பயிர் இன்சூரன்ஸ் பதிவு பாதிப்பு
/
பட்டா, சிட்டா, சர்வர் முடக்கம்: பயிர் இன்சூரன்ஸ் பதிவு பாதிப்பு
பட்டா, சிட்டா, சர்வர் முடக்கம்: பயிர் இன்சூரன்ஸ் பதிவு பாதிப்பு
பட்டா, சிட்டா, சர்வர் முடக்கம்: பயிர் இன்சூரன்ஸ் பதிவு பாதிப்பு
ADDED : நவ 02, 2025 10:43 PM
ஆர்.எஸ்.மங்கலம்: பட்டா சிட்டா, நில புலப்பட விவரங்களை பார்வையிடும், தமிழ்நாடு இ. சர்வீஸ் சர்வர் முடங்கியதால், பட்டா சிட்டா நகல் எடுக்க முடியாமல், இன்சூரன்ஸ் பதிவு மேற்கொள்ளும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட சாகுபடி பயிர்கள் வறட்சி, வெள்ளம், இயற்கை சீற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பாதிப்படையும் போது, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில், 2016 முதல், பிரதான் மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் நெல் பயிர்களுக்கு பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்வதற்கு நவ.15, கடைசி நாளாகும். இத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு, வி.ஏ.ஓ., வழங்கும் சாகுபடி அடங்கல் சான்று, வங்கி கணக்கு புத்தகம், பட்டா, சிட்டா நகல் ஆகியவை அவசியம்.
இந்த நிலையில், விவசாயிகளின் நில உரிமைக்கான பட்டா சிட்டா எடுப்பதற்கான, தமிழ்நாடு அரசின் இ.சர்வீஸ் சர்வர் முடங்கி உள்ளதன் காரணமாக, நேற்று காலை முதல் பயிர் இன்சூரன்ஸ் பதிவு மேற்கொள்ளும் விவசாயிகள் பட்டா, சிட்டா டவுன்லோடு செய்ய முடியாமல் பாதிப்படைந்துள்ளனர். பயிர் இன்சூரன்ஸ் பதிவு மேற்கொள்வதற்கு ஓ.டி.பி., நடைமுறையால் காலதாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், பட்டா சிட்டா சர்வரும் முடங்கி உள்ளதால், இன்சூரன்ஸ் பதிவு மேற்கொள்ளுதல், பட்டா மாற்ற விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே, சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் சர்வரில் ஏற்பட்டுள்ள பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

