/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துணை மின்நிலையம் அமைக்க இடம் கிடைக்காமல் வாரியத்தினர் திணறல்
/
துணை மின்நிலையம் அமைக்க இடம் கிடைக்காமல் வாரியத்தினர் திணறல்
துணை மின்நிலையம் அமைக்க இடம் கிடைக்காமல் வாரியத்தினர் திணறல்
துணை மின்நிலையம் அமைக்க இடம் கிடைக்காமல் வாரியத்தினர் திணறல்
ADDED : நவ 02, 2025 10:43 PM
தொண்டி:  எஸ்.பி.பட்டினத்தில் இடம் கிடைக்காததால் துணை மின்நிலையம் அமைக்க முடியாமல் மின்வாரியத்தினர் திணறுகின்றனர்.
தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம், புல்லக்கடம்பன், ஓரியூர், கலியநகரி ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வீடுகள் மற்றும் கடைகளுக்கு வழங்கபடும் மின்விநியோகம் சீரானதாக இல்லை. குடியிருப்புகள் அதிகமாகி வருவதால் மின்தடை மற்றும் குறைந்த மின் அழுத்தம் ஆகிய பிரச்னைகள் அடிக்கடி உருவாகின்றன. இதற்கு நிரந்தர தீர்வாக எஸ்.பி.பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்க மக்கள் வலியுறுத்தினர். துணை மின்நிலையம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யபட்டும் இடம் கிடைக்காததால் மின் வாரியத்தினர் திணறி வருகின்றனர்.
திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகமூர்த்தி கூறியதாவது- மின்தேவையை எதிர்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எஸ்.பி.பட்டினத்தில் துணை மின்நிலையம் அமைக்க ஐந்தாண்டு திட்டத்தில் அனுமதி கிடைத்துவிட்டது. துணைமின் நிலையம் அமைக்க முயற்சி எடுத்த போதும், அதற்கு தேவையான இடம் கிடைக்கவில்லை. 1.5 ஏக்கர் நிலம் கிடைத்தால் அலுவலகம் உட்பட துணை மின்நிலையம் அமைக்கப்படும். இடம் தேர்வு செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். அரசு நிலம் இருந்தால் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

