/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழை, மின்னலின் போது அலைபேசி தவிர்க்க அறிவுரை
/
மழை, மின்னலின் போது அலைபேசி தவிர்க்க அறிவுரை
ADDED : நவ 02, 2025 10:44 PM
ராமநாதபுரம்:  வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் எதிர்பாராத மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அலைபேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்பு குறித்து தெரிந்து கொள்ள TN Alert, Sachet செயலிகளை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இடிமின்னல் நேரங்களில் வீட்டின் ஜன்னல், மின்கம்பங்கள், ஆன்டெனாக்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். மின்சாதனங்களின் இணைப்பை துண்டிக்க வேண்டும். முடிந்தவரை அலைபேசி பயன்படுத்துவதை தவிர்க்கவும். திறந்த வெளியில் வேலை செய்வதையும், குளம், ஏரி, நீரோடைகளுக்கு அருகில் செல்வதையும் தவிர்க்க வேண்டும். மரங்களுக்கு அடியில் நிற்க கூடாது என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

