/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஒடிசா ரயிலில் புகையிலை பறிமுதல்
/
ஒடிசா ரயிலில் புகையிலை பறிமுதல்
ADDED : நவ 02, 2025 10:44 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மோப்பநாய் படை பிரிவினர் மோப்பநாய் 'ஆரா' உதவியுடன் ரயிலில் கடத்திவந்த 10 கிலோ புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இருந்து ராமநாதபுரத்திற்கு வெள்ளிக்கிழமை தோறும் விரைவு ரயில் இயக்கப் படுகிறது. இந்நிலையில் கடந்த அக்.,31 புவனேஷ்வரில் இருந்து புறப்பட்ட ரயில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு பரமக்குடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது.
அங்கிருந்து ராமநாதபுரம் மோப்பநாய் படை பிரிவினர் மோப்பநாய் 'ஆரா'உதவியுடன் ஓடும் ரயிலில் சோதனை செய்து வந்தனர். அப்போது முன்பதிவில்லாத பெட்டியில் தனியாக இருந்த மூட்டையை மோப்பநாய் அடையாளம் கண்டது. உடனே போலீசார் அதை சோதனை செய்த போது உள்ளே 10 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. ராமநாதபுரம் ரயில் நிலையம் வந்ததும் புகையிலை பொருட்கள் கொண்ட மூடைகளை பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை கொண்டு வந்த நபர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

