/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நகராட்சிகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது கடம்பூர் ராஜு பேச்சு
/
நகராட்சிகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது கடம்பூர் ராஜு பேச்சு
நகராட்சிகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது கடம்பூர் ராஜு பேச்சு
நகராட்சிகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது கடம்பூர் ராஜு பேச்சு
ADDED : ஜன 29, 2025 06:46 AM
ராமேஸ்வரம்: தமிழகம் முழுவதும் நகராட்சிகளில் ஊழல் தலை விரித்தாடுகிறது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
ராமேஸ்வரம் நகராட்சி துப்புரவுப் பணியில் முறைகேடு நடப்பதை கண்டித்தும், அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்படுவதை கண்டித்தும் நேற்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ராமேஸ்வரம் நகர் அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர் செயலாளர் கே.கே.அர்ச்சுனன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது:
தமிழகத்தில் வீதி வீதியாக மது, கஞ்சா தாராளமாக விற்கின்றனர். மருத்துவமனையில் டாக்டர்கள், நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் கத்திக் குத்து, தாக்குதல் சம்பவங்கள் நடக்கிறது. கொலை, கொள்ளைகள் சாதாரணமாக நடப்பதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது.
ராமேஸ்வரம் நகராட்சி உள்ளிட்ட தமிழகத்தில் 127 நகராட்சிகளிலும் துாய்மைப் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. சொத்து வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி உயர்வால் மக்கள் துயரத்தில் உள்ளனர்.
ராமேஸ்வரம் மருத்துவமனையில் 19 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில் 3 பேர் மட்டுமே உள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். தினமும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதாகி சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.
பல லட்சம் மதிப்புள்ள படகுகளை இழந்த மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். மீனவர்களை பாதுகாக்க 39 எம்.பி., க்கள் பார்லிமென்டில் குரல் எழுப்பாமல் மவுனமாக உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மக்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மகளிர் அணி கீர்த்திகா உட்பட பலர் பங்கேற்றனர்.

