ADDED : டிச 01, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வாணி கிராமத்தில் உள்ள செய்யது ஹாதி ஒலியுல்லா தர்காவில் கந்துாரி விழாவில் கறிவிருந்து நடந்தது.
தர்காவில் நேர்த்திக் கடன் நிறைவேறிய பின்பும், நிறைவேற வேண்டியும் கிடாய் வெட்டி பொதுமக்களுக்கு கூட்டு கறி விருந்து வழங்குவது வழக்கம்.
வாணி கிராமத்தைச் சார்ந்த முகமது ஜஹார்தீன் குடும்பத்தின் சார்பில் கந்துாரி விழா நேற்று நடந்தது. முன்னதாக செய்யது ஹாதி ஒலியுல்லா தர்காவில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. வாணி கிராம ஜமாத் தலைவர் ஜாகிர் உசேன், அசன் கனி மற்றும் சுற்றுப்புற கிராமப்புற மக்கள் விழாவில் பங்கேற்றனர்.

