
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; திருவாடானை அருகே இளமணி கிராமத்தில் பூமாரியம்மன் கோயில் திருவிழா ஆக.,20 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக கோயில் பூஜாரி பழனி, 20 கி.மீ.,ல் நம்புதாளை கடலில் இருந்து ஐந்து கரக குடங்களை தலையில் சுமந்தபடி கண்மாய், வயல்காடு வழியாக கோயில் வரை ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. இரவில் பூக்குழி இறங்குதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.