/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
/
கீழக்கரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 19, 2025 11:35 PM
கீழக்கரை: கீழக்கரையில் ரோட்டரி சங்க நிர்வாகிகளின் பதவியேற்பு விழா தனியார் மஹாலில் நடந்தது. பட்டயத் தலைவர் அலாவுதீன் வரவேற்றார். சங்கத்தின் புதிய தலைவராக சிவகார்த்திகேயன், செயலாளராக ஆண்டனி சதீஷ், பொருளாளராக சபீக் மற்றும் சங்க உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி கவர்னர் (தேர்வு) காந்தி, முதன்மை துணையாளர் மணிகண்டன், ரோட்டரி துணை கவர்னர் சுந்தரம், பட்டிமன்ற பேச்சாளர் துரைப்பாண்டியன் மற்றும் முன்னாள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான கல்வி விருதுகள் வழங்கப்பட்டது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கிய இரண்டு வீரர்களுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கீழக்கரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.