/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை முத்து மாரியம்மன் முளைக்கொட்டு உற்ஸவம்
/
கீழக்கரை முத்து மாரியம்மன் முளைக்கொட்டு உற்ஸவம்
ADDED : செப் 02, 2025 10:53 PM

கீழக்கரை; கீழக்கரை வண்ணார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 75ம் ஆண்டு முளைக்கொட்டு உற்ஸவம் நடந்தது. ஆக., 24ல் கணபதி ஹோமத்துடன் முத்து எடுக்கும் விழா துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. நேற்று காலை ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். இரவு 8:00 மணிக்கு அம்மன் சக்தி கரகம் முன்னே செல்ல கீழக்கரை முக்கு ரோடு, பாரதி நகர் வழியாக முத்துமாரியம்மன் கோயிலை வந்தடைந்தது.
மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை மூலவர் முத்துமாரியம்மன் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பின்பு முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக மீனவர் குப்பம் கடற்கரையில் பாரி கங்கை சேர்க்கப்படுகிறது.