/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
2022ல் கட்டப்பட்ட கீழக்கரை தாலுகா அலுவலகம் சேதம்
/
2022ல் கட்டப்பட்ட கீழக்கரை தாலுகா அலுவலகம் சேதம்
2022ல் கட்டப்பட்ட கீழக்கரை தாலுகா அலுவலகம் சேதம்
2022ல் கட்டப்பட்ட கீழக்கரை தாலுகா அலுவலகம் சேதம்
ADDED : நவ 26, 2025 04:44 AM

கீழக்கரை: கீழக்கரை தாலுகா அலுவலகம் 2022-ல் புதிதாக கட்டப்பட்ட நிலையில் தற்போது இரண்டே ஆண்டுகளில் கட்டடத்தின் சுவர்கள் பெயர்ந்து விழுகிறது.
கீழக்கரை தாலுகா 2015 புதியதாக உருவாக்கப்பட்டது. 26 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. கீழக்கரை நகராட்சி மேல் தளத்தில் இயங்கி வந்தது. அதன் பின் 2022ல் ரூ. 2 கோடியே 75 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு கீழக்கரை முனீஸ்வரம் அருகே காஞ்சிரங்குடி ஊராட்சி பகுதியில் இயங்கி வருகிறது.
இங்கு தாலுகா அலுவலகத்தின் பக்கவாட்டு சுவர்கள் முழுவதும் சேதமடைந்து பெயர்ந்து சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. கட்டுமானங்கள் தரமற்றிருப்பதால் சேதமடைந்து வருகிறது. இதன் அருகே தாலுகா அலுவலக தாசில்தார் குடியிருப்பு பகுதி புதர் மண்டியுள்ளது. மேல் தளத்திற்கு செல்வதற்கு மாடிப்படி இதுவரை அமைக்கப்படவில்லை.
இதனால் மேல் மாடிக்கு சென்று தண்ணீர் நிரப்புவது உள்ளிட்ட பணிகளுக்கு பணியாளர்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் மீண்டும் பராமரிப்பு பணிகள் செய்யவும், தரமற்ற பணிகளால் அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க முறையாக கட்டடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

