/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சீமான் கட்சி எதிர்ப்பால் 'கிங்டம்' காட்சிகள் ரத்து
/
சீமான் கட்சி எதிர்ப்பால் 'கிங்டம்' காட்சிகள் ரத்து
சீமான் கட்சி எதிர்ப்பால் 'கிங்டம்' காட்சிகள் ரத்து
சீமான் கட்சி எதிர்ப்பால் 'கிங்டம்' காட்சிகள் ரத்து
ADDED : ஆக 06, 2025 12:47 AM

ராமநாதபுரம்: கிங்டம் படம் திரையிடுவதை ரத்து செய்ய வேண்டும் என ராமநாதபுரத்தில் தியேட்டர் முன் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
அண்மையில் வெளியான கிங்டம் திரைப்படத்தில் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல் சித்தரித்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். ராமநாதபுரத்தில் அந்த திரைப்படத்தை திரையிடக் கூடாது என கட்சியின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நுாறுக்கும் மேற்பட்டோர் ஊர்வலம் நடத்தினர்.
தியேட்டரில் பேனரை கிழித்து சேதப்படுத்தினர். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். எதிர்ப்பை அடுத்து நேற்று அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.