/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்ட் கடை ஏலத்தில் முறைகேடு லஞ்ச ஒழிப்புத்துறையில் கிருஷ்ணசாமி புகார்

ADDED : ஆக 13, 2025 11:20 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் ஏலமிட்டதில் நடந்துள்ள முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்திபுதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமிராமநாதபுரம் ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகம்,கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் புகார் மனு அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலுச்சாமி பெயரில் ஊழல் தடுப்புலஞ்ச ஒழிப்புதுறை, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில் வணிக வளாககடைகளை ஒதுக்கீடு செய்வதில் மோசடிநடந்துள்ளது.
சட்ட விதிகளுக்கு புறம்பாக நகராட்சி அதிகாரிகள்உடந்தையுடன் சில கவுன்சிலர்களின் உறவினர் பெயரில்கடையை ஏலம் எடுத்துள்ளனர். வியாபாரிகள் பலரிடம் விண்ணப்பம் பெறவில்லை. பட்டியலின சமுதாயத்திற்கு 18 சதவீதம் இடஒதுக்கீடு முறையை பின்பற்றவில்லை. இந்த ஏலத்தை ரத்து செய்யவேண்டும்.
முறைகேட்டில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள், மக்கள்பிரதிநிதிகள் உட்பட அனைவர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவுசெய்ய வேண்டும்.
கலெக்டர் நடவடிக்கைஎடுப்பதாக கூறியுள்ளார். இல்லையெனில் எங்கள் கட்சி சார்பில்அடுத்த வாரம் போராட்டம் நடைபெறும் என்றார்.