நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வடக்கூரில் உள்ள சிவன், விஷ்ணு, அக்னி வீரனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம் துவங்கி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தனபூஜை, முதல் கால யாக பூஜைகள், மூல மந்திரங்கள் பூர்ணாஹூதி நடந்தது.
நேற்று காலை கோபூஜை, லட்சுமி பூஜை, இரண்டாம்கால யாக பூஜை, பூர்ணாஹூதி, கலச புறப்பாடுக்கு பிறகு சிவாச்சாரியார்கள் தலைமையில் கும்பநீர் ஊற்றப்பட்டது. சிவன், விஷ்ணு, விநாயகர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

