நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை வடக்கு புதுத்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டு நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலையில் கடம் புறப்பாட்டுடன் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

