ADDED : ஆக 31, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீரனுார் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை கோபூஜை, லட்சுமி பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, கலச புறப்படுக்கு பிறகு சிவாச்சாரியார் நாகராஜன் ஐயர் தலைமையில் கும்ப நீர் ஊற்றப்பட்டது.
அரியநாச்சி உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது.
