ADDED : ஆக 31, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி தெற்கு தோப்பை சேர்ந்தவர் ஹரிகரசுதன் 28. கூலித் தொழிலாளியான இவர் ஆக.,19 இரவு விலக்கனேந்தல் பகுதியில் உள்ள ஒரு வீட்டு கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தார். மாடியில் நின்று கொண்டு வேலை செய்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
படுகாயமடைந்த ஹரிகர சுதன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இறந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
