ADDED : ஆக 31, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஏகாம்பர சிவன் கோயிலில் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு மூலவருக்கு 11 வகை அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை பாடினர். உலக நன்மைக்கான அர்ச்சனை செய்யப்பட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் விஸ்வ கம்மாளர் சமுதாய மக்கள் செய்திருந்தனர்.
