/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
l தோட்டக்கலைத்துறை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் அழைப்பு !இழப்பீடாக மிளகாய்க்கு ஏக்கருக்கு ரூ.28,900 பெறலாம்

ADDED : டிச 06, 2025 05:42 AM

மாவட்டத்தில் நெற் பயிர்களுக்கு அடுத்தப் படியாக மிளகாய் 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் சாகுபடி செய்யப்படுகிறது. இத்துடன் வாழை, கொத்தமல்லி, வெங்காயம் போன்றவை நயினார்கோவில், கமுதி, சிக்கல், முதுகுளத்துார் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.
நடப்பாண்டில் 2025--26ம் ஆண்டு ராபி பரு வத்தில் பயிரிடப்படும் தோட்டக்கலைப் பயிர் களான மிளகாய், கொத்த மல்லி, வெங்காயம் மற்றும் வாழை பயிர் களைப் பயிரிடும் விவ சாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.
குறு வட்டங்களில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் எதிர்பாராத இயற்கை பேரிடலிருந்து பயிர்களைக் காக்க புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் இத்திட்டத் தில் பதிவு செய்யும் போது விண்ணப்ப படிவம், உறுதிமொழி படிவம், வி.ஏ.ஓ., வழங்கும் மூவிதழ் அடங்கல், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆறு முகம் தெரிவித்துள்ளார்.