/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் ஐந்து நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை மக்கள் தவிப்பு: அடிக்கடி பிரச்னை ஏற்படுவதால் லாரிகளில் விற்பனை ஜோர்

ADDED : ஜூலை 16, 2025 11:22 PM

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 65 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். நகரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 2011 முதல் திருச்சி நங்கநல்லுார் காவிரி ஆற்றில் இருந்து 200 கி.மீ., குழாய் மூலம் ராமநாதபுரத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
காவிரியில் இருந்து பெறப்படும் தண்ணீர் கீழ்நிலைத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து நொச்சிவயல் ஊருணி, முகவை ஊருணி மேல்நிலைத்தொட்டி, லேத்தம்ஸ் மேல்நிலைத் தொட்டி, பஸ் ஸ்டாண்ட் மேல்நிலைத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு ராமநாதபுரம் நகரில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஜூலை 8, 9 ஆகிய இருநாட்கள்மாதந்திர பராமரிப்பு பணிக்காக காவிரி குடிநீர் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது 2 நாட்களாக புதுக்கோட்டை பகுதயில் குழாய் சேதமடைந்துள்ளதை சரிசெய்யும் பணி காரணமாகவும் நிறுத்தியுள்ளனர். இதனால் 5 நாட்களுக்கும் மேலாக மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.
மேலும் நகரில் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குழாய் இணைப்பு பணியின் போது குழாய் சேதமடைந்து குடிநீர் வீணாகிறது.
இதே போல் அடிக்கடி காவிரிகுடிநீர் நிறுத்தப்படுவது வழக்கமாகியுள்ளது. இதனால் ராமநாதபுரம் நகர், அருகேயுள்ள பட்டணம்காத்தான், சக்கரகோட்டை, சூரன்கோட்டை கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது.
இருப்பில் உள்ள குடிநீரை சில பகுதிக்கு லாரியில் பெயரளவில் வினியோகம் செய்கின்றனர். இதனால் மக்கள் குடிநீரை குடம் ரூ.13 வரை விலைக்கு வாங்கிசிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'திருச்சியில் இருந்து வரும் பிரதான குழாய் புதுக்கோட்டையில் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்கும் பணி நடக்கிறது. அதனால் தான் குடிநீர் வரவில்லை. நாளை (இன்று) முதல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றனர்.