ADDED : செப் 21, 2024 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகர் கிளைகளில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொழிற்சங்க தலைவர்களை கைது செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புறநகர் கிளை பணிமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிளைத்தலைவர் போஸ் தலைமை வகித்தார். செயலாளர் எம்.பாஸ்கரன், பொருளாளர் ராம்குமார், துணைச் செயலாளர்கள் முருகராஜ், சக்திவேல், துணைத்தலைவர்கள் ஆறுமுகம், ஜெயக்குமார் பங்கேற்றனர்.
நகர் கிளை பணிமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர் கிளைத்தலைவர் துரைப்பாண்டியன், செயலாளர் பாஸ்கரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் சாம்சங்தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்திற்கு சென்ற மாநிலத்தலைவர் சவுந்திரராஜன், செயலாளர் சுகுமாறனை கைது செய்த போலீசாரை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர்.