/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொழிற்சங்கத்தினர் போராட்டம் அறிவித்ததால் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் திறப்பு

ADDED : ஜன 14, 2025 05:08 AM
ராமநாதபுரம்: தொழிற்சங்கத்தினர் திறக்கப்போவதாக போராட்டம் அறிவித்ததால் ராமநாதபுரத்தில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
ராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் ஊராட்சி அலுவலகம் அருகே ரூ.4 கோடியே 44 லட்சத்தில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் கட்டி ஓராண்டாக திறக்கப்படாமல் இருந்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் சார்பில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் திறக்கப்படாவிட்டால் ஜன., 27 ல் தொழிலாளர்கள் கட்டத்தை திறப்பார்கள், என அறிவித்தனர். இதன்காரணமாக நேற்ற தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முதல்வர் ஸ்டாலினால் காணொளி காட்சி மூலம் திறக்கப்பட்டது. கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தொழிலாளர் நலத்துறை புதிய அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை இணை கமிஷனர் சுப்பிரமணியன், துணை கமிஷனர்கள் மலர் விழி, குணசேகரன், அதிகாரிகள், தி.மு.க., பிரதிநிதிகள் பங்கேற்றனர்.