நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் இன்டர்நெட் ஆப் திங்ஸ் என்ற ஆய்வகம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேஷ் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை லுாகாஸ் டிவிஎஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் உதயகுமார் ஆய்வகத்தை திறந்து வைத்தார்.
மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த தொழிற்கல்வியின் முக்கியத்துவம் பற்றி கூறினார். சென்னை கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி ஆலோசகர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். மின்னியல் துறை தலைவர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.