/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மூக்கையூரில் பராமரிப்பின்றி பாலம் சேதமடையும் அபாயம்
/
மூக்கையூரில் பராமரிப்பின்றி பாலம் சேதமடையும் அபாயம்
மூக்கையூரில் பராமரிப்பின்றி பாலம் சேதமடையும் அபாயம்
மூக்கையூரில் பராமரிப்பின்றி பாலம் சேதமடையும் அபாயம்
ADDED : அக் 01, 2025 08:08 AM

சாயல்குடி : சாயல்குடி அருகே 7 கி.மீ.,ல் மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது.
மூக்கையூர் மன்னார் வளைகுடா மீன்பிடி துறைமுகத்திற்கு செல்வதற்கு 2015ல் மீன்வளத்துறை சார்பில் ரூ.1 கோடியில் 300 மீ., நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
பாலத்திற்கு கீழே கடலும் ஆறும் சங்கமிக்க கூடிய முகத்துவாரம் செல்வதால் எல்லா காலங்களிலும் அப்பகுதியில் நீர்வரத்து இருந்து கொண்டே இருக்கும். மூக்கையூர் செல்லக்கூடிய அனைத்து கனரக வாகனங்களும் நாள்தோறும் மீன்பிடித்து ஏற்றிச் செல்லக்கூடிய லாரிகளும் பயணிக்கின்றன.
இந்நிலையில் பல ஆண்டுகளாக பாலத்தின் நடுப்பகுதியை ஒட்டி மூன்று பகுதிகளில் இணைப்பு கம்பிகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன.
இதனால் வாகனங்கள் வழியாக செல்லும் போது அடிக்கடி பாலத்தில் அதிர்வு ஏற்படுகிறது. பாலத்தின் தொடக்கப் பகுதியில் மழைக்காலங்களில் மண்ணரிப்பால் அப்பகுதியில் பள்ளம் அடிக்கடி உருவாகிறது.
மீனவர்கள் கூறியதாவது: மூக்கையூர் செல்லும் பாலத்தின் வழியாக நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன. எனவே பாலம் பராமரிப்பின்றி பொலிவிழந்துள்ளது.
எனவே மீன்வளத் துறையினர் பாலத்தை பராமரிப்பு பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.