ADDED : நவ 27, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தில் இரண்டாம் ஆண்டு ரத்ததான முகாம் நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி மெஹ்பூப் அலிகான் துவக்கி வைத்தார். டாக்டர் இ.எம்., அப்துல்லா நினைவு குருதிக் கொடை பாசறை ஆலோசகர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் அன்புச் செழியன் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர்கள் 40க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் முத்து துரைச்சாமி, ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தாய்பாசம் அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நுாருல் சமது, நிர்வாகிகள் அப்துல்ஹமீத், அஜீஸ் ரஹ்மான் ஏற்பாடுகளை செய்தனர்.

