/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
lராமநாதபுரத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: ரூ.555 கோடியில் இறுதி கட்டத்தில் பணிகள்
/
lராமநாதபுரத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: ரூ.555 கோடியில் இறுதி கட்டத்தில் பணிகள்
lராமநாதபுரத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: ரூ.555 கோடியில் இறுதி கட்டத்தில் பணிகள்
lராமநாதபுரத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம்: ரூ.555 கோடியில் இறுதி கட்டத்தில் பணிகள்
ADDED : டிச 19, 2024 04:37 AM
ராமநாதபுரம்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.555 கோடியில் திருச்சி அருகே காவிரி ஆற்றுப்படுகையில் புதிய கிணறு அமைத்து புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் குழாய்கள் புதிதாக மாற்றும் புனரமைப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் 2009ம் ஆண்டில் ராமநாதபுரம்,சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ரூ.616 கோடியில்காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பெயரளவில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பராமரிப்பின்றி போனதால் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலம் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் மக்கள் குடிநீருக்காக குடங்களுடன் அலைய வேண்டியுள்ளது. நகர், புறநகர் பகுதிகளில் வழக்கத்தை விட 10 லட்சம் லிட்டர் வரை குடிநீர் குறைவாக விநியோகிக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண திருச்சி காவிரியில் 5வதாக புதிய கிணறு அமைத்து சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 3163 ஊராட்சிகளுக்கான காவிரி குழாய்கள் புதிதாக மாற்ற ரூ.555 கோடியில் பணிகள் 2023 நவ., முதல் மேற்கொள்ளப்பட்டு அக்.,2024 நிறைவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் கூறுகையில், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் புனரமைப்புத் திட்டத்தில் டிச.19, 20ல் ராமநாதபுரம் வழித்தடத்தில் பிரதான குழாய்களை இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. 2025 ஜனவரியில் புனரமைப்பு பணிகள் முடிந்துவிடும் என்றனர்.