ADDED : அக் 29, 2025 08:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு, போதை ஒழிப்புக் கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியர் ஞானலெட் சுவர்ணகுமாரி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செல்வக்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்ட சார்பு நீதிபதி பேசுகையில், 'ஒழுக்கத்துடன் கூடிய கல்வியும், போதை இல்லா பாதையும் தான் வெற்றியை தேடித்தரும்' என்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் யோகேஸ்வரன் மாணவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

