/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வரத்து அதிகரிப்பால் எலுமிச்சை விலை சரிவு
/
வரத்து அதிகரிப்பால் எலுமிச்சை விலை சரிவு
ADDED : நவ 20, 2025 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: வரத்து குறைவால் கடந்த மாதம் கிலோ ரூ.120 வரை விற்றஎலுமிச்சைப் பழம், தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.60 ஆக விலை குறைந்துள்ளது.
வடகிழக்கு பருவ மழையால் காய்கறி, பழங்கள் விளைச்சல்அதிகரித்து சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளன. ராமநாதபுரத்தில் காய்கறிசாகுபடி குறைவு காரணமாக மதுரை, திண்டுக்கல் போன்ற வெளியூர்களில் இருந்து வாங்கி வந்து விற்கின்றனர்.
தற்போது எலுமிச்சை வரத்து அதி கரித்துள்ளதால் கடந்த அக்.,ல் ராமநாதபுரம் சந்தையில் கிலோ ரூ.120 வரை விற்றது இந்த வாரம் விலை சரிவடைந்து கிலோ ரூ.60க்கு விற்பதாக வியாபாரிகள் கூறினர்.

