/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழக்கு கடற்கரை ரோட்டில் நடுவுல கொஞ்சம் காணோம்
/
கிழக்கு கடற்கரை ரோட்டில் நடுவுல கொஞ்சம் காணோம்
ADDED : பிப் 17, 2025 05:28 AM

ஆர்.எஸ்.மங்கலம்: கிழக்கு கடற்கரை சாலையில் ரோட்டில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விபத்துகள் தொடர்கின்றன.
கிழக்கு கடற்கரை சாலையின் வழியாக வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் 90 கி.மீ., வேகத்திற்கும் குறையாமல் செல்கின்றன.
இந்நிலையில் ரோட்டில் திடீரென பள்ளங்கள் இருப்பதால் வேகத்தை உடனடியாக குறைக்க முடியாமல் விபத்துக்களில் சிக்குகின்றனர்.
குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை புதுப்பட்டினம், புதுக்காடு, ஏ.மணக்குடி, உப்பூர், திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, ரோட்டின் நடுவில் மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் விபத்துக்களில் சிக்குகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.