/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்
/
எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 05, 2024 04:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் எல்.ஐ.சி., அலுவலகத்தில் லிகாய் முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிளைத்தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். வாழ்வாதாரத்தை பறிக்கும் ஐ.ஆர்.டி.ஏ.,வை கண்டித்தும், கமிஷன் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷமிட்டனர்.
மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, செயல் தலைவர் வையச்சாமி, பொதுசெயலாளர் கர்ணன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.--