/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் எல்.ஐ.சி., முகவர்கள் கவுரவிப்பு
/
பரமக்குடியில் எல்.ஐ.சி., முகவர்கள் கவுரவிப்பு
ADDED : பிப் 26, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில் எம்.டி.ஆர்.டி., முடித்த மற்றும் 100 பாலிசிகள் கொடுத்த முகவர்களுக்கான கவுரவிப்பு கூட்டம் நடந்தது.
எல்.ஐ.சி., கிளை மேலாளர் சுதாகர் தலைமை வகித்தார். சங்க தலைவர் கலைமுருகன் முன்னிலை வகித்தார். சிவரஞ்சனி வரவேற்றார். முதல் நிலை அதிகாரிகள் சங்க நிர்வாகி பாண்டியன், ஏ.டி.எம்., வளர்ச்சி அதிகாரிகள் சங்க நிர்வாகி சங்கராஜ், முகவர்கள் சங்க நிர்வாகி மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.
மதுரை கோட்ட ஐ.சி.இ.யு., சங்க இணைச் செயலாளர் தணிக்கைராஜ் பேசினார். கிளை சார்பில் ஏராளமான முகவர்கள் கலந்து கொண்டனர்.

