/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தரமற்ற உணவு வகைகளை வழங்கினால் உரிமம் ரத்து
/
தரமற்ற உணவு வகைகளை வழங்கினால் உரிமம் ரத்து
ADDED : ஜன 09, 2024 12:04 AM
பரமக்குடி, ; -தரமற்ற உணவுகளை மக்களுக்கு வழங்கினால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று சத்திரக்குடியில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
பரமக்குடி அருகே சத்திரக்குடியில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயகுமார் தலைமையில் சோதனை நடத்தினர். புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து 2 வது முறை புகையிலை விற்பனை செய்யும் கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 30 நாட்கள் கடை மூடப்படும். 3 வது முறையாக பிடிபட்டால் ரூ.1 லட்சம் அபராதம், 90 நாட்களுக்கு கடை மூடப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து இச்செயலில் ஈடுபட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றனர்.