/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விற்பனை ரசீது வழங்காத உரக்கடைகளின் உரிமம் ரத்து! விதிகளை கடைபிடிக்க வேளாண் துறை எச்சரிக்கை
/
விற்பனை ரசீது வழங்காத உரக்கடைகளின் உரிமம் ரத்து! விதிகளை கடைபிடிக்க வேளாண் துறை எச்சரிக்கை
விற்பனை ரசீது வழங்காத உரக்கடைகளின் உரிமம் ரத்து! விதிகளை கடைபிடிக்க வேளாண் துறை எச்சரிக்கை
விற்பனை ரசீது வழங்காத உரக்கடைகளின் உரிமம் ரத்து! விதிகளை கடைபிடிக்க வேளாண் துறை எச்சரிக்கை
ADDED : நவ 19, 2025 07:21 AM

ராமநாதபுரம்: விவசாயிகளுக்கு கண்டிப்பாக உரம் விற்பனை ரசீது வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் உரிமம் ரத்து, அபராதம் விதித்தல் ஆகிய கடும் நடவடிக்கை விற்பனையாளர் மீது எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட வேளாண் துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் செப்., நவ., வரை கிடைக்கப்பெற்ற 310 மி. மீ., மழையை பயன்படுத்தி நெல் சிறுதானியங்கள், பயறு வகைப் பயிர்கள் என 3 லட்சம் ஏக்கருக்க மேல் சாகுபடி செய்யப்பட்டு விவசாயப் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. தற்சமயம் சாகுபடி செய்யப்பட்டு வரும் பயிர்களுக்குத் தேவையான யூரியா 2776 டன், டி.ஏ.பி. 1170 டன், பொட்டாஷ் 237 டன், காம்ப்ளக்ஸ் 3728 டன் என 7910 டன் உரங்கள் இருப்பு உள்ளது.
இவை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலமாகவும் விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. இதுநாள் வரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக யூரியா 2150 டன், டி.ஏ.பி. 1559 டன், காம்ப்ளக்ஸ் 1520 டன் என 4522 டன் உரமும், தனியார் மூலம் 10 ஆயிரத்து 162 டன் உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனையாகியுள்ளது.
தற்போது சம்பா பருவத்திற்கு மதுரை கூடல் நகர் கோடவுனில் இருந்து 743 டன் யூரியா உர மூடை பெறப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 354 டன்னும், தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு 389 டன் உர மூடைகள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேளாண் இணை இயக்குநர் (பொ) பாஸ்கர மணியன் கூறியிருப்பதாவது: உர விற்பனையாளர்கள் உரங்களின் இருப்பு விவரம் மற்றும் விலைப்பட்டியலை விவசாயிகளுக்கு தெரியும்படி வைக்க வேண்டும். விற்பனை செய்யும் போது விவசாயிகளிடம் ஆதார் அடையாள அட்டை பெற்று விற்பனை முனைஇயந்திரம் மூலமாக மட்டுமே விற்க வேண்டும். கண்டிப்பாக விற்பனை ரசீது வழங்கப்பட வேண்டும்.
தவறும் பட்சத்தில் உர விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி அபராதம் விதித்தல், உரிமம் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

