/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலந்தைகுளத்தில் இரவில் எரியும் மின்விளக்குகள்
/
இலந்தைகுளத்தில் இரவில் எரியும் மின்விளக்குகள்
ADDED : நவ 05, 2024 04:58 AM
சாயல்குடி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சாயல்குடி அருகே எஸ். இலந்தைகுளத்தில் மின்கம்பங்களில் பல்புகள் பொருத்தப்பட்டு மின்விளக்குகள் எரிகின்றன.
ஏ.உசிலங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.இலந்தைகுளத்தில் கடந்த 10 நாட்களாக தெரு விளக்குகளில் வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்தது. பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.இது குறித்து தினமலர் நாளிதழில் கடந்த நவ.2ல் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மின்கம்பங்களில் உள்ள பழுதடைந்த மின்விளக்குகள் மாற்றப்பட்டு புதிய பல்புகள் பொருத்தப்பட்டன. இதையடுத்து இரவு நேரங்களில் அப்பகுதியில் வெளிச்சம் கிடைத்தது. செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.