ADDED : ஜூன் 19, 2025 11:51 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே புளியங்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கால்நடை உதவி இயக்குனர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். உதவி டாக்டர்கள் மோகன், திருச்செல்வி முன்னிலை வகித்தனர்.
கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்தல், குடற்புழு நீக்கம், உடல் பரிசோதனை, அறுவை சிகிச்சை, கால்காணை, வாய்காணை உட்பட பல்வேறு பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்தினர். முகாமில் 72 பேர்களின் 2152 கால்நடைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
கால்நடை வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினர். பின்பு சிறந்த முறையில் கால்நடைகள் வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. உடன் ஊராட்சி செயலர் ராஜா, கால்நடை ஆய்வாளர் வீரகேசரி, பராமரிப்பு உதவியாளர்கள்விஜயராணி, செந்தில் உட்பட பலர் உடன் இருந்தனர்.