/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமங்களில் ஜூலை 2 முதல் கால்நடை தடுப்பூசி முகாம்
/
கிராமங்களில் ஜூலை 2 முதல் கால்நடை தடுப்பூசி முகாம்
கிராமங்களில் ஜூலை 2 முதல் கால்நடை தடுப்பூசி முகாம்
கிராமங்களில் ஜூலை 2 முதல் கால்நடை தடுப்பூசி முகாம்
ADDED : ஜூன் 30, 2025 04:11 AM
ராமநாதபுரம் : தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் கால் மற்றும் வாய்க்காணை நோய் தடுப்பூசி போடும் பணிகள் கிராமங்களில் ஜூலை 2 முதல் 31 வரை நடைபெற உள்ளது.
கால் மற்றும் வாய்காணை நோயானது நாட்டினம் மற்றும் அயலின கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.
கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு, சினைப்பிடிப்பு தடைபடுவது, எருதுகளின் வேலை திறன் குறைவு, இளங்கன்றுகள் இறப்பு போன்றவை ஏற்படுகிறது.
தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் கால் மற்றும் வாய்க்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் ஜூலை 2 முதல் 31 வரையிலும் நடைபெற உள்ளது. கால்நடை வளர்ப்போர் தங்களது கிராமங்களில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.