/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுமை துாக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை
/
சுமை துாக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை
ADDED : ஜூலை 20, 2025 03:26 AM
பரமக்குடி:பரமக்குடியில், டூ - வீலரில் வந்த இளைஞர்களால், சுமை துாக்கும் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, அண்ணாநகரை சேர்ந்தவர் சித்திரை கண்ணன், 49; சுமை துாக்கும் தொழிலாளி. இவர், நேற்றிரவு, 7:00 மணிக்கு போர்டிங் ரோடு சந்தைப்பகுதியில் நின்ற போது, டூ - வீலரில் சென்ற இரு இளைஞர்கள், சித்திரை கண்ணனை அரிவாளால் வெட்ட முயன்றனர்.
அருகில் இருந்த கமிஷன் கடைக்குள் ஓடிய அவரை, விரட்டி சென்று கழுத்து மற்றும் கைப்பகுதியில் வெட்டி தப்பினர்.
சம்பவ இடத்திலேயே சித்திரை கண்ணன் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
போலீசார் கூறுகையில், 'சித்திரை கண்ணனுக்கும், அப்பகுதி இளைஞர்களுக்கும் முன் விரோதம் இருப்பதாக தெரி கிறது. குற்றவாளிகளை தேடி வருகிறோம்' என்றனர்.