/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் வட்டி சலுகையுடன் விவசாயிகளுக்கு கடன்

ADDED : மார் 27, 2025 07:17 AM
ராமநாதபுரம்: மத்திய அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வட்டி சலுகையுடன் கடன் வழங்கப்படுகிறது.
விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் வேளாண் துவக்க நிதி நிறுவனங்களுக்கு தேவையான கட்டுமான வசதிகளை ஏற்படுத்தி கொள்ள ஏதுவாக வேளாண் உட்கட்டமைப்பு நிதி என்ற மத்திய அரசின் திட்டத்தில் கடன் உதவி மற்றும் வட்டியில் 3 சதவீதம் சலுகையும் வழங்கப்படுகிறது.
உதாரணமாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விதிக்கப்படும் வட்டி விகிதம் 4 சதவீதமாகும். இத்திட்டத்தில் 3 சதவீதம் வட்டியில் விலக்கு அளிக்கப்படுவதால் நிகர வட்டி விகிதம் ஒரு சதவீதமாகும். விருப்பமுள்ளவர்கள் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை திட்ட வரையறைக்குள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.
மாதிரி திட்ட அறிக்கையை agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், ராமநாதபுரம், 04567- 290459 தொலைபேசி எண், இ-மெயில்- rmddic@gmail.comல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.