/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் சயன கோலத்தில் பெருமாள்
/
பரமக்குடியில் சயன கோலத்தில் பெருமாள்
ADDED : நவ 13, 2024 10:06 PM

பரமக்குடி ; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தைலக்காப்பு விழாவையொட்டி சயன கோலத்தில் பெருமாள் அருள் பாலித்தார்.
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூலவராக பரமசுவாமி அருள் பாலிக்கிறார்.
மதுரை அழகர் கோயிலில் தொட்டி உற்ஸவம் எனப்படும் தைலக்காப்பு விழா துவங்கிய நிலையில், பரமக்குடியில் நேற்று முன்தினம் இரவு பெருமாள் சயன கோலத்தில் எழுந்தருளினார். மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.நேற்று இரவு 8:00 மணிக்கு பெருமாள் கொண்டையிட்டு ஏகாந்த சேவையில் வீற்றிருந்தார். தொடர்ந்து வாசனை திரவியங்களால் தைலம் சாற்றி துாப தீப அலங்காரங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.