ADDED : பிப் 04, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உலக நன்மைக்கான மகா சண்டி யாகம் நடந்தது. காலையில் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது.
மாலை ஏராளமான கலசங்கள் வைக்கப்பட்டு அவற்றின் மீது புனித நீர் நிரப்பப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன.
முன்னதாக மூலவர்கள் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நிறைவேற்றப்பட்டது.
யாக வேள்வி வளர்க்கப்பட்டு அவற்றில் சண்டி ஹோமம் உள்ளிட்டவைகள் நடந்தது.
பின்னர் பூர்ணஹூதியும், அபிஷேகம், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை ஹரிஹர சர்மா செய்திருந்தார். ஏற்பாடுகளை கீழக்கரை, ஏர்வாடி பிரதோஷ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

