/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் மகிஷாசூரன் வதம்
/
ராமேஸ்வரம் கோயிலில் மகிஷாசூரன் வதம்
ADDED : அக் 03, 2025 01:19 AM

ராமேஸ்வரம்; விஜயதசமியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி மகிஷாசூரனை வதம் செய்தார்.
நவராத்திரி விழாவையொட்டி செப்., 21ல் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பர்வத வர்த்தினி அம்மனுக்கு காப்பு கட்டி விழா துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் பர்வதவர்த்தினி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 11ம் நாள் விஜயதசமியான நேற்று மாலை 5:00 மணிக்கு கோயிலில் இருந்து பர்வத வர்த்தினி அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப் பாடாகி வன்னி நோன்பு தரவையில் எழுந்தருளி னார். தங்க குதிரை வாகனத்தில் ராமநாத சுவாமி புறப்பாடாகினார்.
வன்னி நோன்பு தரவையில் அம்மன் அம்பு எய்து மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் நடத்தினார். அதன் பின் அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.