/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விஜயதசமி விழாவில் வன்னிகா சூரன் வதம்
/
விஜயதசமி விழாவில் வன்னிகா சூரன் வதம்
ADDED : அக் 03, 2025 01:19 AM

பரமக்குடி; பரமக்குடியில் பெருமாள் மற்றும் சிவன், முருகன் கோயில்களில் விஜயதசமி விழாவையொட்டி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 9 நாட்களாக நவராத்திரி விழா நடந்தது. தற்போது சவுந்தரவல்லி தாயார் பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலித்தார். நேற்று மாலை 6:00 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி வைகை ஆற்றின் படித் துறையில் எழுந்தருளினார். இதே போல் ஈஸ்வரன் கோயில் விசாலாட்சி அம்மன் குதிரை வாக னத்தில் அமர்ந்து வந்தார்.
அப்போது வன்னிகா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதே போல் தரைப்பாலம் முருகன் கோயில் சுப்பிர மணிய சுவாமி குதிரை வாகனத்தில் எழுந் தருளினார். தொடர்ந்து எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் அமர்ந்து அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.