நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம்:
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நேற்று மகரஜோதி தரிசனம் நடந்தது.
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நேற்று காலை அஷ்டாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வல்லபை ஐயப்பன் சன்னதி முன்புறம் அலங்கரிக்கப்பட்ட குடிலில் சுவாமி ஐயப்பன் படம் வைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை 6:40 மணிக்கு மகரஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ரெகுநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் 'ஐயப்ப சரணகோஷம்' முழங்க தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பதை போன்று இங்கும் மகரஜோதி தரிசனம் நடந்து வருகிறது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.