ADDED : ஆக 30, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே களரியைச் சேர்ந்த கஜேந்திரன் மனைவி மாலா ராணி 32. கஜேந்திரன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். மாலா ராணியின் சகோதரி சுமதியின் கணவர் அபிமன்யு 45, அடிக்கடி மாலா ராணியிடம் அவரது வயலில் தனது மனைவிக்கும் பங்கு உள்ளது என கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு அபிமன்யு மது போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
வெளியே வந்த மாலாராணி கண்டித்த போது அருகில் இருந்த உருட்டு கட்டையால் தாக்கி காயப்படுத்தினர். உத்தரகோசமங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.
