/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி அருகே போதை புகையிலை விற்றவர் கைது
/
பள்ளி அருகே போதை புகையிலை விற்றவர் கைது
ADDED : அக் 19, 2025 03:01 AM

தொண்டி: தொண்டியில் பள்ளி அருகே பெட்டிக்கடையில் போதை புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்தனர். தொண்டியில் போதை புகையிலை விற்பனை அதிகமாக உள்ளது.
போலீசார் கெடுபிடியையும் மீறி இப்பகுதி பெட்டிக்கடைகளில் புகையிலை விற்பனை அமோகமாக உள்ளது.
நேற்று முன்தினம் தொண்டி எஸ்.எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், தனிப்பிரிவு ஏட்டு ராசு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தொண்டி பஸ்ஸ்டாண்ட் அருகே பெட்டிக்கடையில் புகையிலை விற்ற பழயணக்கோட்டை கோபி 34, கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், இக்கடை அருகே தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட போதைப் புகையிலையை பறிமுதல் செய்துள்ளோம்.
மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.