/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆம்புலன்ஸ்சுக்கு வழிவிடாமல் நின்ற மாடுகள்
/
ஆம்புலன்ஸ்சுக்கு வழிவிடாமல் நின்ற மாடுகள்
ADDED : அக் 19, 2025 03:16 AM

தொண்டி: ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் மாடுகள் ரோட்டில் சுற்றித் திரிவதால் அவசர காலங்களில் போக்குவரத்து தடைபட்டு ஆம்புலன்ஸ் செல்வதற்கும் தாமதம் ஏற்படுகிறது.
தொண்டியில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே இரவில் ஏராளமான மாடுகள் ரோட்டில் படுத்து ஓய்வெடுக்கின்றன. நேற்று முன்தினம் இரவு ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் மாடுகள் நின்றதால் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கால்நடை வளர்ப்போர் ரோட்டில் சுற்றி திரிய விடாமல் பாதுகாக்க வேண்டும். ரோட்டில் மாடுகள் கூட்டமாக சுற்றித் திரிவதால் ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அவசர சிகிச்சைக்குச் செல்பவர்கள் பாதிக்கப் படுகின்றனர். இதன் மூலம் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
கால்நடைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவற்றை சாலைகளில் சுற்றித் திரிய விடாமல் பாதுகாப்பது உரிமையாளர்களின் பொறுப் பாகும் என்றனர்.