தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தடுப்பு கல்லில் மோதி தவறி விழுந்தவர் பலி

தடுப்பு கல்லில் மோதி தவறி விழுந்தவர் பலி

தடுப்பு கல்லில் மோதி தவறி விழுந்தவர் பலி


ADDED : செப் 28, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை: கடலாடி யூனியன் அலுவலகம் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தவர் சக்திவேல் 60. இவரது மகள் ஜோதிலட்சுமி 25, குரூப்- 1 தேர்வு எழுத ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்வதற்காக தந்தையுடன் டூவீலரில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கடலாடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்துள்ளனர். டூவீலரை சக்திவேல் ஒட்டினார்.

கீழக்கரை அகத்தியர் கோயில் அருகே வளைவில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக ரோட்டின் வலது பக்கத்தில் இருந்த தடுப்புக் கல்லில் மோதியதில் சக்திவேல் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. பின்னால் அமர்ந்திருந்த ஜோதிலட்சுமிக்கு கையில் காயம் ஏற்பட்டது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்திவேல் இறந்தார். கீழக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us