/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை விழா
/
ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை விழா
ADDED : டிச 29, 2025 06:50 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை விழா கோலாகலமாக நடந்தது.
பரமக்குடி எமனேஸ்வரம் வண்டியூர் திடலில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் 35ம் ஆண்டு மண்டல பூஜை மற்றும் 108 கலச அபிஷேகம் நடந்தது. காலை அணுக்ஞை, கலச ஆராதனை, ஹோமங்கள் நடந்தன. பின்னர் பால், நெய் அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. எமனேஸ்வரம் ஐயப்பன் கோயில் சேவைக் குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.
பரமக்குடி பாரதி நகர் தர்மசாஸ்தா கோயிலில் 55வது மண்டல பூஜை விழா நடந்தது. காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்த குடங்கள் கட்டப்பட்டு வீதி வலம் வந்தனர். பின்னர் ஐயப்ப சுவாமி கோயிலை அடைந்ததும் மகா அபிஷேகம் நடந்தது. இரவு தர்ம சாஸ்தா சர்வ அலங்காரத்தில் வலம் வந்தார்.
பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்ம சாஸ்தா கோயிலில் நேற்று காலை அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு ஐயன் சர்வ அலங்காரத்துடன் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் சரணகோஷம் முழங்க தரிசித்தனர்.
* திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை விழா நடந்தது. சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. ஐயப்ப பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
*முதுகுளத்துார் பரமக்குடி ரோடு மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் 55ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. குருநாதர் திருமால், துணை குருநாதர் புயல்நாதன், டிரஸ்ட் தலைவர் கண்ணதாசன் முன்னிலை வகித்தனர். அதிகாலை கணபதி ஹோமம் துவங்கி யாகசாலை பூஜைகள் நடந்தது. பின் காலை 9:00 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது.
ஐயப்பனுக்கு நெய், பால் உட்பட 16 வகை அபிஷேகம், பூஜைகள் நடந்தது.பக்தர்கள் படி பூஜை, பஜனை பாடல்கள் பாடினர். முதுவை சாஸ்தா பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் நடந்தது. மாலை உற்சவர் ஐயப்பன் பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, முருகன் கோயில் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தனர். அப்போது பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர். விழாவில் முதுகுளத்துார் சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முதுகுளத்துார் வழிவிடு முருகன் கோயிலில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடந்தது. பக்தர்கள் படி பூஜை, பஜனை பாடல்கள் பாடினர். பின் அன்னதானம் வழங்கப்பட்டது. முதுகுளத்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையில் விளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. உற்ஸவர் ஐயப்பன் அலங்காரிக்கப்பட்ட தேரில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.

