/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் திறப்பு
/
அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் திறப்பு
ADDED : டிச 29, 2025 06:43 AM
ராமநாதபும்: - தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகிலும், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்திலும் அ.தி.மு.க., ஆட்சியில் அம்மா உணவகம் கொண்டுவரப்பட்டது. மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்கள் பயனடைந்தனர். கடந்த ஜன., மாதம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவக கட்டட கூரை பெயர்ந்து விழுந்தது. அன்று முதல் அம்மா உணவகம் செயல்படாமல் மூடப்பட்டது.
மலேரியா வார்டு அருகே உள்ள கட்டடத்தை புதுப்பித்து அங்கு அம்மா உணவகம் செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகாரிகளின் அலட்சியத்தால் ஓராண்டாக உணவகம் திறக்கப்படாமல் இருந்தது. இதனை திறக்க வலியுறுத்தி தினமலர் நாளிதல் பலமுறை செய்தி வெளியிட்டும் அதிகாரிகள் அலட்சியத்தால் திறக்கப்படாமல் இருந்தது.
சமீபத்தில் டீக்கடை பெஞ்ச் பகுதியில் அம்மா உணவகம் திறக்கப்படாதது குறித்து செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் அம்மா உணவகம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது காலை, மாலை இரு வேளை உணவு வழங்கப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் 24 மணி நேரமும் வந்து செல்வதால் இரவும் உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

